AD

"உங்களுடைய சிரிப்பை மட்டுமே நான் காண்பேன் "



திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். அவரின் ரசிகர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள், ரஜினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இன்ஸ்டாகிராமில், ``உங்களை எப்பவுமே பின் தொடர்வேன் அப்பா" என்று தனது தந்தைக்கு வாக்குக் கொடுத்து வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். மேலும், ``எப்பவுமே உங்களுடைய  சிரிப்பை மட்டுமே நான் காண விரும்புகிறேன். மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா" என்று பதிவிட்டு,
ரஜினியைப் பின் தொடர்ந்து செல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


ரஜினின் மருமகனும் ஐஸ்வர்யாவின் கணவருமான நடிகர் தனுஷ் ரஜினிக்கு ட்விட்டரில் தனது வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ``பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா'' என்று பதிவிட்டு தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.


அதே போன்று ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து Happy birthday my life! my father... my everything!" என்றும் தெரிவித்துள்ளார்.

#HappyBirthdayRajinikanth #Rajini #Rajinibirthday