AD

முதன்முறையாக இணையும் ஜோடி

கடந்த 2017ம் ஆண்டு வெளியான பொலிஸ் திரில்லர் படமான ‘குற்றம் 23’ திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் ‘AV31’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிகர்  அருண் விஜய் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ள இந்நிலையில், இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் முதன்முறையாக இந்த படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

விஜய் ராகவேந்திராவின் ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ள இப்படத்தை ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.