AD

இளமை திரும்பும் அஜித்

கறுப்பு தலை முடி, கிளீன் ஷேவ், மீசை என்று முற்றிலுமாக இளவட்டமாக மாறியுள்ளார் அஜித்.

மங்காத்தா முதல், தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வந்தார் அஜித் குமார். 

இதைவிட நேர்கொண்ட பார்வையில் இதற்கு முன்பு நடித்ததை விட மிகவும் முதிர்ச்சியான கெட்டப்பில் நடித்தார். 

இந்த நிலையில், தற்போது,  வினோத் நடிக்கும் தனது 60 ஆவது படத்தில் அஜித் இளவட்டமாக மாறியுள்ளார் 

நேற்று சென்னை விமான நிலையத்தில் இளமையான கெட்டப்பில் அஜித் வந்தார். அப்போது இளமையாக மட்டுமின்றி ஸ்டைலான தோற்றத்தில் அவரைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டு போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். 

அஜித்தின் இளமை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது  வைரலாகி வருகின்றன.