AD

சாதனை படைத்துவரும் பிகில்


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியான ‘பிகில்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இப் படம்  விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார்.  இதனை விட அப்பா - மகன் என்று இரு தோற்றங்களிலும் விஜய் நடித்திருக்கிறார்.

 ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க, நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் வெளியான பிகில் 2 நாள்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இத்துடன் விஜய்க்கு ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த 7ஆவது படம் இதுவாகும். 

இதுவரை தீபாவளி தினத்தில் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார், தற்போது வெளியான பிகில் ஆகிய படங்கள் அனைத்தும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.