AD

ஹீரோயின் ஆன பாரதிராஜாவின் நண்பரின் மகள்

சுசீந்திரன் இயக்கி உள்ள படம் கென்னடி கிளப். இது பெண்கள் கபடி விளையாட்டை மையமாக கொண்ட படம். இதில் பாரதிராஜா, சசிகுமார், சூரி, நந்தகுமார் ஆகியோருடன் மதுரையை சேர்ந்த மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் பாரதிராஜாவின் நண்பரின் மகள். இதுகுறித்து பாரதிராஜா கூறியதாவது:
மீனாட்சியின் அப்பா கோவிந்தராஜன் எனது நண்பன். அப்போது அவன் சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவன்தான் எனக்கு சென்னை வந்து விடு சினிமாவில் ஜெயிக்கலாம் என்று கடிதம் எழுதி வரவழைத்தவன். நானும், அவனும் வடபழனியில் ஒரே அறையில் தங்கியிருந்தோம்.
திடீரென ஒரு நாள் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்து விட்டது. பிரிந்து விட்டோம். பிறகு பேசிக் கொண்டோம். அவன் வீட்டு நிகழ்ச்சிக்கெல்லாம் நான் தவறாக செல்வேன். அப்போது மீனாட்சி சின்ன குழந்தை. இப்போது பெரிய மனுஷியாகிவிட்ட என் நண்பனின் மகள் என் படத்தில் என்னுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.