AD

சூப்பர் குட்டின் 90வது படத்தில் ஜீவா

1990ஆம் ஆண்டு புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் கால் பதித்தது ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். தமிழ் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி மொழிகளில் பல படங்களை தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் .
இந்நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய 90 வது படமாக மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் தான் களத்தில் சந்திப்போம் . இதில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகன் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் அருள்நிதி மற்றொரு நாயகனாக நடிக்கிறார். முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் .
கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன் , பிரியா பவனி சங்கர் நடிக்க இவர்களுடன் ரோபோசங்கர் , ராதாரவி, பால சரவணன், இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேலராமமூர்த்தி ரேணுகா , ஸ்ரீரஞ்சனி , பூலோகம் ராஜேஷ் , பெனிடோ ஆகியோர் நடிக்கிறார்கள் . பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார் .
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் என்.ராஜசேகர், ஆர்.அசோக் வசனம் எழுதுகிறார், யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பா.விஜய், விவேகா பாடல்களை எழுதுகிறார்கள். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.