AD

500 தியேட்டர்களில் சாஹோ

பிரபாஸ் நடித்து எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகவுள்ள படம் 'சாஹோ'. 

தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படும்
இந்தப் படம் பாகுபலி படத்தைவிட  அதிக தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இப் படத்தை சுமார் 550 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார்களாம். 

'பாகுபலி' இரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்களில் வெளியிட்டார்களாம். அதைவிட அதிகமான தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவுள்ளார்கள்.

'சாஹோ' படத்தின் வெளியீட்டால் தமிழில் கூட பல படங்களின் வெளியீடுகளை தள்ளி வைத்துவிட்டார்கள். பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ள 'சாஹோ' படம் 'பாகுபலி 22 வசூலை முறியடிக்குமா?