AD

சூர்யா பட பாடலை வெளியிடும் ரஜினி

அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு சூர்யா - கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகி உள்ள படம் காப்பான். மோகன்லால், சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி பொம்மன் இரானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோகன்லால் பிரதமராகவும், சூர்யாவின் அவரின் காப்பாளராகவும் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் சிரிக்கி என்ற சிங்கிள் டிராக் பாடலை வெளியிட்டனர். வரும் 21ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாய் நடைபெறுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர் கலந்து கொண்டு காப்பான் பட பாடல்களை வெளியிடுகின்றனர். சூர்யாவிற்கு ஜூலை 23-ந்தேதி பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக பாடலை வெளியிடுகின்றனர்.