AD

ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிடும் அனைவரும் குற்றவாளிகள் இல்லை

ஜெய்ஸ்ரீராம் எனும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லையென கங்கனா ரனாவத், பிரசூன் ஜோஷி பென் உள்ளிட்ட 61 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

கும்பல் வன்முறைக்கு எதிராகவும், ‘ஜெய் ஸ்ரீராம்' என்கிற கோஷம் வன்முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட கலைஞர்கள் 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரானவத், சினிமா தயாரிப்பாளர் விவேக் அக்னிகோத்தாரி, நடனக் கலைஞரும், எம்பி-யும் ஆன சோனால் மான்சிங் உள்ளிட்ட 62 பேர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

அதில் அவர்கள்“கடந்த ஜூலை 23 ஆம் தேதி பிரமருக்கு 49 பேர் எழுதிய கடிதத்தில், அரசியல் சார்பும் தனிப்பட்ட உள்நோக்கமும் இருந்த தாக கூறியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்மறையாக சித்தரிக்கும் வகையில் கடிதம் எழுதி உள்ளவர்கள், முன்பு நக்சல் அமைப்பினரும், பழங்குடியினரும் விளிம்புநிலை மனிதர்களைத் தாக்கியபோதும் அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

பிரிவினைவாதிகள் காஷ்மீரில் பள்ளிகளை கொளுத்தும்போது அவர்கள் அமைதியாக இருந்ததாகவும், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகள் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.