AD

ஆர்யா எடுத்த அதிரடி முடிவு

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிசியான ஹீரோக்களில் ஒருவராக இருந்தார் ஆர்யா. அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவியதால் மார்க்கெட் இழந்தார். தற்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார்.

'மௌன குரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் 'மகாமுனி' என்ற படத்தில் நடித்துள்ளார். 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யாவுடன் இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ஆர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'காப்பான்'. சூர்யா, மோகன்லால், சாயிஷா நடிக்கும் காப்பான் படத்தில் மோகன்லாலின் மகனாக ஆர்யா நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிக்க ஆர்யாவுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோவாக நடிக்க வாங்கும் சம்பளத்தில் பாதி கூட இல்லை.

'மகாமுனி' படம் வெற்றியடைந்து எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றால் இனிமேல் பிராபிட் ஷேர் அடிப்படையில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம் ஆர்யா.