AD

பாலிவுட்டிற்கு செல்லும் ஜீவி

‘8 தோட்டாக்கள்’ வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் தயாரிப்பில் உருவான இரண்டாவது படம்  ‘ஜீவி’. இதில் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிதந்திருந்தனர். 

முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 

விமர்சன ரீதியாகவும் ‘ஜீவி’ படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த படத்தை ரீமேக் செய்ய பாலிவுட் தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.