AD

விளையாட்டு வீராங்கனைகளுடன் 'பிகில், கென்னடி கிளப்'

தமிழ் சினிமாவில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைக்கப்பட்டு வெளிவந்த படங்கள் மிகமிகக் குறைவு. அதிலும் கூட விளையாட்டு வீரர்களைப் பற்றியாவது சில படங்கள் வெளிவந்துள்ளன. விளையாட்டு வீராங்கனைகளைப் பற்றிய படங்களைப் பார்ப்பது அரிதான ஒன்று.

கடந்த வருடம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்த 'கனா' படம் அந்த நீண்ட நாளைய குறையைப் போக்கியது. இயல்பான விளையாட்டுப் படமாக சென்டிமென்ட்டுடன் அமைந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி நடித்து வெளிவர உள்ள 'கென்னடி கிளப்' படம் கபடி ஆடும் வீராங்கனைகளைப் பற்றிய படமாக வர உள்ளது. அதற்கடுத்து அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள 'பிகில்' படம் கால்பந்தாட்டம் விளையாடும் வீராங்கனைகளைப் பற்றிய படமாக வெளியாக உள்ளது.

இரண்டு படங்களுமே வீராங்கனைகளைப் பற்றிய படங்கள்தான். விளையாட்டுக்கள்தான் வேறு வேறு. இரண்டு படங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது, என்ன ஒற்றுமை இருக்கப் போகிறது என்பது இரண்டு படங்களும் வெளிவந்த பிறகுதான் தெரியும்.