AD

பும்ரா பற்றி கேள்வி : நோ கமெண்ட்ஸ் சொன்ன அனுபமா


தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடனும் அவர் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்

இதுகுறித்து ஐதராபாத்தில் அனுபமா அளித்த ஒரு பேட்டியில், பும்ராவைப் பற்றி ஏற்கனவே நான் பலமுறை சொல்லிவிட்டேன். அதனால் அதைப்பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நோ கமெண்ட்ஸ் என்றார்.

உதவி இயக்குனராக பணியாற்றியதால் எப்போது படம் இயக்கப்போகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். எனக்கு படம் இயக்குவதில் ஆர்வமில்லை. படப்பிடிப்பு தளத்தில் திரைக்கு பின்னால் இருப்பவர்கள் ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்காகவே உதவி இயக்குனராக பணியாற்றினேன். அது எனக்கு சினிமாவில் வேறு சில நுட்பங்களையும் அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.