AD

அம்மாவுடன் போக மாட்டேன்- வனிதாவின் மகன் வைரல் வீடியோ..!!

பிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக வருவது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் பேசுவேன் இது தான் வனிதாவின் லாஜிக். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கடும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.


வனிதாவின் மகனை ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். அதற்கு வனிதாவின் தந்தை விஜயகுமாரும் சம்மதம் தெரிவித்ததோடு மட்டும் இல்லாது அவர் ஆகாஷ் பக்கமே நின்றார் என்பது குறிப்பிடதக்கது. அதன் பின்னர் ஸ்ரீஹரி, அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.


இந்த நிலையில் ஸ்ரீஹரி வனிதா குறித்து பேசிய மற்றுமொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் வீடியோவில் அந்த சிறுவன், தனது அம்மாவுடன் போக தனக்கு விருப்பம் இல்லை என்றும்
நீதிபதியே சொன்னாலும் நான் அம்மாவுடன் போக மாட்டேன் என்றும் பேசியுள்ளார்.

#Vanitha #Vijayakumar #Srihari #ViralVideo #BiggbossTamil3 #Vijaytv #Cinesamugam