AD

யாஷிகாவை வசைபாடும் ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடித்துள்ள ஜாம்பி படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாகி இருந்தது.
யாஷிகா ஆனந்த் அடிக்கடி சர்ச்சையான சில பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாவது  வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் அடுத்த மாதம் வரும் பிறந்தநாளை தற்போதே கொண்டாடியுள்ளார்.
என்னதான் படங்களில் நடித்து லட்ச கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இபப்டி ஒரு மாதத்திற்கு முன்னாள் பிறந்தநாள் கொண்டாடுவதெல்லாம் ரொம்ப ஓவர் என்று ரசிகர்கள் யாஷிகாவை விமர்சித்து வருகிறார்கள். ஏற்கனவே, யாஷிகாவை லைவ் சாட்டில் அவரது நண்பர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வை3ரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
#YasikaAnand #Birthday #PreBirthday #Latestnews #Tamilcinema #Cinesamugam