AD

வனிதா பெயரை டாட்டூ போட்டது ஏன்.! ராபர்ட் விளக்கம்..!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது முறை அறிந்த ஒன்று. இரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா.

மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தையும் இயக்கி நடித்தும் இருந்தார் வனிதா. அதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும், அதன் பிறகு அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் வனிதா கூறியிருந்தார்.
இது வரைக்கும் வாய் திறக்காத ராபர்ட் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் வனிதா ஏன் இவ்வாறு பொய் கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். ராபர்ட் மாஸ்டர் வனிதாவின் பேரை  டாட்டூவாக குத்தியிருத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், ராபர்ட் மாஸ்டர் கையில் தற்போது அந்த டாட்டூ இல்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராபர்ட் ,மாஸ்டர் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், என்னை வைத்து அவர் எம் ஜி ஆர் சிவாஜி படத்தை தயாரித்தார்.
அதற்க்கு நன்றி கடனாக தான் நான் அவருடைய பெயரை டாட்டூவாக குத்தினேன். ஆனால், வனிதாவின் காதலர் அவருடன் சண்டை போட்டதால் வனிதா என்னிடம் வந்து ஏன் இதுமாதிரி டாட்டூ குத்தியுள்ளீர்கள் என்று என்னிடம் சத்தம் போட்டார்.

நான் எம் ஜி ஆர் சிவாஜி படத்தின் ஆடியோ ரிலீசுக்கு முன்னதாக அந்த டாட்டூவை போட்டேன். ஆனால், ஆடியோ ரிலீஸ் வெளியாகி சரியாக இரண்டு மாதம் ரிலீஸ் படம் வெளிவந்த போதே நான் அந்த டாட்டூவை அழித்துவிட்டேன் என்று கூறியுள்ளார் ராபர்ட். எது இப்படியோ வனிதா வெளியில் வந்தால் தான் உண்மை தெரியும்.


#BiggBossTamil3 #RobertMaster #Vanitha #VanithaTatooIssue #Latestnews #Tamilcinema #Cinesamugam