AD

மகனை கொல்ல முயன்ற வனிதா வைரல் வீடியோ..!

2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வனிதா. இந்த தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
இதன் பிறகு மகனை அப்பா ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். அதற்கு வனிதாவின் தந்தை விஜயகுமாரும் சம்மதம் தெரிவித்ததோடு அவர் ஆகாஷ் பக்கமே நின்றார். அதன் பின்னர் ஸ்ரீஹரி, அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த விடியோவில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, நான் உன்னுடன் வர விரும்பவில்லை என்று கூறுகிறார்.
ஆனால், வனிதாவோ ‘அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று கூறிவிட்டு அந்த சிறுவனை இழுத்து பிடித்துக்கொண்டு, ஒரு கட்டத்தில் விஜயகுமார் மற்றும் வனிதா அந்த சிறுவனுக்காக சண்டை போட இறுதியில் வனிதா, அந்த சிறுவனின் கழுத்தை இறுக்கி பிடித்துக்கொள்கிறார். இதனால் அருகில் இருந்த அனைவருமே குழந்தையின் கழுத்தை நெருக்குகிறீர்களே என்று கூறியும் வனிதா அதனை காதில் வாங்காமல் இருக்கிறார். பல வருடங்களுக்கு முன் வந்த இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

#BiggBossTamil3 #Vanitha #வனிதா #vanithafight #vanithafightwithherfather #vanithason #latestnews #tamilcinemaking #cinesamugam