AD

ஊதா கலரு பிகினி போட்டோ வெளியிட்ட ராய் லட்சுமி

ராய் லட்சுமி தனது பிகினி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கற்க கசடற படம் மூலம் நடிகையானவர் ராய் லட்சுமி. நடிக்க வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

 இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். பாலிவுட் படமான ஜூலி 2-ல் நடித்த பிறகு ராய் லட்சுமி உடலை சிக்கென்று வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஜூலி 2 படத்தில் பிகினி அணிந்து கவர்ச்சியாக நடிக்க வசதியாக அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். பிகினி அணிந்து நடிக்க உடல் எடையை குறைப்பது பாலிவுட்டில் சாதாரண விஷயம். அதை தான் ராய் லட்சுமியும் செய்தார். அந்த படம் ஓடாவிட்டாலும் உடல்நலனில் அக்கறை செலுத்துவதை அவர் நிறுத்தவில்லை.

 இந்நிலையில் அவர் ஊதா கலரு பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிகினி பாடியை பெற ரொம்ப கஷ்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். புது மனுஷி போன்று உணர்கிறேன். ஃபிட்டாக இருப்பது பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆடை படத்திற்காக உடல் எடையை குறைத்து படுஃபிட்டாக மாறிய பிறகு தனக்கு தனி தைரியமும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக அமலா பால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராய் லட்சுமியும் அதையே கூறியுள்ளார். ஒரு காலத்தில் லைட்டா தொப்பை வைத்து பூசினாற் போன்று இருந்த ராய் லட்சுமி தற்போது ஃபிட்டாக மாறியதை பார்த்த சில ரசிகர்கள் அவரின் பழைய புகைப்படத்தை வெளியிட்டு எது அழகு என்று கேட்டுள்ளனர்