AD

3டி தொழில்நுட்பத்தில் குருஷேத்திரம் : தமிழிலும் வெளிவருகிறது


கன்னடத்தில் 120 கோடி ரூபாய் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் முனிரத்னா குருஷேத்திரம். மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதத்தில் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும் படம்.

நாகன்னா இயக்கும் இந்தப் படத்தில் அம்பிரிஷ், தர்ஷன், அர்ஜுன், அம்பரீஷ், வி.ரவிச்சந்தர், சோனு சூட், ரவி ஷங்கர், ராக்லைன் வெங்கடேஷ், திரௌபதியாக சினேகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள் . ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார். ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். முனிரத்னா எழுதி தயாரித்துள்ளார்

உலகளவில் முதன் முறையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் புராண படம். விருஷபாத்ரி புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தை தமிழில், வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு வெளியிடுகிறார். இதுதவிர. ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.