ஜெ சமாதிக்கு சென்ற நடிகை..!!
தேர்தல் நேரங்களில் அதிமுகவுக்காகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகை விந்தியா. மைக்கை பிடித்தாலே  ருத்ரதாண்டவம் ஆடும் விந்தியாவின் பேச்சை கேட்க ஏராளமான மக்கள் கூட்டம் கூடும்.  இருப்பினும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு விந்தியா அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்வதை நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் நடிகை விந்தியா மாம்பழ கூடையுடன் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்பு தான் கொண்டு வந்த மாம்பழங்களை அங்கிருந்த மக்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
நடிகை விந்தியாவின் மாம்பழ தோட்டத்தில் விளையும் மாம்பழம் என்றால் ஜெயலலிதாவுக்கு கொள்ளைப்பிரியமாம். அதனால் அவர் உயிருடன் இருக்கும் போது, ஆண்டுதோறும் மறக்காமல் அவருக்கு மாம்பழத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுவாராம். அந்த வழக்கத்தின் படிதான் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களைக் கொண்டு வந்து வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார் விந்தியா. முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் இதே போல் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
#Vindhya #Latestnews #Tamilcinemaking

Post a Comment