AD

விஷாலை வெச்சு செய்யும் ஸ்ரீரெட்டி..!!!

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடக்க சரியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர் விஷாலை தனது முகநூல் பக்கத்தில் மிக அசிங்கமாக தொடர்ந்து அர்ச்சனை செய்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கில் நிர்வாண போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். அதே போல தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார்.

 தமிழ் சினிமா நடிகர்களான லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்ற பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து நாசம் செய்தனர் என்று பகீர் குற்றசாட்டை கூறியிருந்தார். அதே போல விஷால் குறித்தும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை கூறி வந்தார் ஸ்ரீரெட்டி. இந்த நிலையில் நேற்று (15 ஜூன் ) ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் நடிகர் விஷால் குறித்து தொடர்ந்து ஆபாசமாக பதிவுகள் இட்டு வருகிறார்.
மிச்ச பதிவுகளில், 'நீங்கள் பல பெண்களை ஏமாற்றி உள்ளீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் நீங்கள் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். விஷாலுக்கு யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறீர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அவர் மிகப்பெரிய ஏமாற்று வாதி என் அம்மாவின் மீதும், எனது தொழில் மீதும் நான் சத்தியம் செய்து கூறுகிறேன்.  நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னை கொன்றாலும் சரி இப்போதும் நான் சொல்லுவேன் விஷால் ஒரு ஏமாற்றுக்காரர் தான். அவரின் படங்களில் நடிக்க பல பெண்கள் அவருடன் படுத்துள்ளார்கள்.
அவர்கள் எல்லாம் தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள். நீங்கள் பணம் கொடுத்துத் தான் அவர்கள் உறவு வைத்துக் கொள்கிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். உங்களுக்கு பெண்களை யார் சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும்' என்று அந்த பதிவில் படு மோசமாக எழுதியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டியின் இந்தப் பதிவுகள் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#srireddy #vshal #nasser #bagyaraj #tamilcinema #tamilcinemaking #latestnews