ரஜினிகாந்தின் மகள்கள் வாழ்த்து தெரிவித்தது - வைரலாகி வருகிறது..!!
உலக தந்தையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பலரும் நேரிலும் சமூகவலைத்தள வாயிலாகவும் தங்களது தந்தைக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நாளின் முடிவில் அவரது அரவணைப்பில் இருக்கும் ஒவ்வொரு நாளும் தந்தையர் தினம் தான். சிறந்த அப்பாவை கொண்டாடுகிறேன். தந்தையை தின வாழ்த்துக்கள் அப்பா. எனக்கு எல்லாமே நீங்கள் தான்' என்று பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்
#superstar #rajinikanth #dhanush #aishwarya #soundarya #latestnews #tamilcinemaking
இதைபோல் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில், தந்தையுடன் பேசிய வீடியோகாலின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும் அதில்,உங்களில் என்னை காண்கிறேன். உங்களுக்கு மகளாக பிறந்தது எனது பாக்கியம்' என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறியுள்ளார். மேலும் கணவர் தனுஷ் மற்றும் இரு மகன்கள் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்ட ஐஸ்வர்யா, தனுஷிற்கு தந்தையர் தின வாழ்த்துகளை கூறியுள்ளார்..... And to be in these arms at the end of the day ❤️❤️❤️ everyday is Father’s Day celebrating the greatest daddy ever 🤗🤗🤗🤗 happy Father’s Day appa .. ur my everything!!! pic.twitter.com/FvNp3BEdI9— soundarya rajnikanth (@soundaryaarajni) June 16, 2019
தர்பார் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வரும் ரஜினிக்கு மகள்கள் வாழ்த்து கூறியுள்ள இந்த புகைப்படங்கள் வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
#superstar #rajinikanth #dhanush #aishwarya #soundarya #latestnews #tamilcinemaking
Post a Comment