AD

படங்கள் இல்லாத கீர்த்தி சுரேஷ், சமந்தா

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும்  சமந்தா போன்றோர்  எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகாதது இரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018 இல் பெரும் வெற்றி பெற்ற 'சர்கார்' படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.  அதுபோல் 2018 இல் சமந்தா, 'இரும்புத் திரை, சீமராஜா, யு டர்ன்' ஆகிய படங்களில் நடித்தார். இதன் பின்னர் இருவரும் தமிழ் படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.

தமிழில் தற்போது அதிகமான படங்களில் நடித்து வரும் நடிகைகளாக நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் தான் இருக்கின்றனர்.  ஹன்சிகா,காஜல் அகர்வால் 'தமன்னா, ஆகியோரும் படங்களில் பிஷியாகவே உள்ளனர்.

இந்த நிலையில்  கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோருக்கு கைவசம் தமிழ்ப் படங்களே இல்லையாம். கீர்த்தி சுரேஷ் ஹிந்தி, மலையாளத்தில் தலா ஒரு படத்திலும், தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். சமந்தா தெலுங்கில் 96 ரீமேக் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.


#KeerthySuresh   #SamanthaAkkineni   #Nayanthara  #tamilcinemaking