AD

இலங்கையில் தெறி ரீமேக் - கோபத்திற்குள்ளான ரசிகர்கள்


தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆண்டு , இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தெறி' . இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு , வசூல் சாதனையும் செய்தது.

மேலும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் குட்டி நைனிகாவின் நடிப்பும், அவருடைய மழலை தனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தளபதி விஜயிற்கு தமிழ் சினிமாவில் எப்படி ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அந்த அளவிற்கு  இலங்கையிலும் மிகப்பெரும் ரசிகர்கள் பலம்  உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது இலங்கையில் ரீமேக் செய்துள்ளனர். இப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது, அதை பார்த்த ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர், இதை விட மோசமாக யாராலும் தெறி படத்தை ரீமேக் செய்ய முடியாது என கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
#Therisinhalaremake #Theriremake #Tamilcinemaking