AD

வடிவேலுக்கு எச்சரிக்கை விடும் சமுத்திரக்கனி ..!!

இயக்குநர்களை அவமரியாதையாகப் பேசியது குறித்து வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி. சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். இதில், 3 வேடங்களில் வடிவேலு நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பல பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
நீண்ட நாட்களாக இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போகிறது. இதனால், வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை போட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.  சமீபத்தில், தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை ஒருமையில் பேசினார். இது, சினிமாத்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்’ என வடிவேலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி.“அண்ணன் வடிவேலு பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசியிருப்பது, பெரும் வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. சிம்புவின் க்ரியேட்டிவ், ‘புலிகேசி’ தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.
#Vadivelu #Director #Samuththirakani #Latestnews #Kollywoodnews #Tamilcinemaking