AD

பேரழகி த்ரிஷாவின் வாழ்க்கை வரலாறு..!!

நடிகை  த்ரிஷா பேரழகியல்ல..., சாவித்ரி போன்று நடிப்பு திலகமும் அல்ல... ஆனாலும் ஆண்டுக்கு 50 ஹீரோயின்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் 15 வருடத்திற்கு மேல் ஹீரோயினாகவே நிலைத்து நிற்பதற்கு என்ன காரணம். அதுவும் த்ரிஷாவுக்கு இப்பொழுது 36வது வயது ஆகின்றது அப்படி என்னதான் இருக்கு இவரிடம் ..அதையும் பார்க்கலாம் வாங்க .
அப்பா மலையாளி, அம்மா பாலக்காட்டு தமிழச்சி. எனவே த்ரிஷா இரண்டும் கலந்த கலவை. அப்பா ஓட்டல் மானேஜர், அம்மா பியூட்டி பார்லர் நடத்தியவர். படித்தது எத்திராஜ் கல்லூரி. இப்படி சராசரி குடும்பம் தான் த்ரிஷாவுடையது. அம்மா மகளை அழகாக்கினார். அழகை தக்க வைக்கும் வழிகள் சொன்னார், அதை அழகாக வெளிப்படுத்தும் தந்திரம் கற்றுக் கொடுத்தார். அதனால் மிஸ்.மெட்ராஸ் ஆனார், மிஸ்.இந்தியா போட்டியில் புன்னகை அழகியானார். சினிமா அள்ளி அணைத்துக் கொண்டது.
1999ம் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான ஜோடி திரைப்படத்தில், சிம்ரனின் தோழியாக த்ரிஷா நடித்தார். அப்போது அவர் ரிச் கேர்ள் கேட்டகிரி. இதுதான் அவர் முதல் திரைத்தோற்றம். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக “மௌனம் பேசியதே”திரைப்படத்தில் நடித்தார். ஹீரோயினாக அவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவே. பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசாவில் ஷோலோ ஹீரோயினாக அறிமுகமானார்.
கமர்ஷியல் நடிகையாக வளர்ந்த த்ரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும், கொடி, அரண்மணை, சமீபத்தில் வெளிவந்த 96 என நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தவர் த்ரிஷா. ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற குறை இருந்தது. அதுவும் பேட்ட படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது. இயக்குனர் “ப்ரியதர்ஷன்” இயக்கத்தில் “காட்டா மேத்தா” எனும் ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார் த்ரிஷா. ஆனால் அந்தப்படம் தோல்வி அடையவே தொடர்ந்து ஹிந்தியில் நடிக்கவில்லை.
த்ரிஷாவிற்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளை பிரியம், தன்  உடல் உறுப்பு தானம் செய்து, தன் சமூக அக்கறையை இன்னும் அழுத்தமாகப் பதித்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் விளம்பர தூதராக இருக்கிறார். முன்பு பீட்டா அமைப்பில் தீவிரமாக பணியாற்றினார். தமிழ்நாட்டில் அந்த அமைப்புக்கு எதிர்ப்பு வரவே அதிலிருந்து விலகி விட்டார். த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை தனித்துவமிக்கது. அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்ந்த சூழ்நிலையிலும் அப்பா மீது தீராத பாசம் கொண்டிருந்தார். ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோவை காதலித்தார். அந்த ஹீரோவின் குடும்பம் இவர்கள் காதலை ஏற்கவில்லை. ஒரு தயாரிப்பாளரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றவர். அவரின் இன்னொரு முகம் அறிந்து விலகினார்.
இப்போதும் தூய அன்புக்கும், காதலுக்கும் ஏங்கும் குழந்தையாகவே இருக்கிறார் த்ரிஷா. த்ரிஷாவுடன் அறிமுகமான ஹீரோயின்கள் இப்போது அக்கா, அண்ணி, அம்மா கேரக்டருக்கு வந்து விட்டார்கள். ஆனால் த்ரிஷா இப்போதும் ஹீரோயின் தான். காரணம் அவர் மனதையும், உடலையும் எப்போதும் இளமையாக வைத்திருக்கிறார். கொஞ்சம் கால அவகாசம் கிடைத்தாலும் உலகின் ஏதோ ஒரு மூலைக்கு சென்று தன் அடையாளங்களை மறந்து சிறகடித்து பறந்து விட்டு திரும்புவார்.