AD

நேர்கொண்ட பார்வை - வசனத்தில் சர்ச்சையா?


நேற்று மாலை வெளியான அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெயிலரை இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்திருக்கின்றனர். அதை விட இன்னொரு அதிசயம் அந்த ட்ரெயிலருக்குக் கீழே 42ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கமெண்டுகள் இடம் பெற்றிருப்பது.

அமிதாப்புடன் கண்டிப்பாக அஜீத்தை ஒப்பிடக்கூடாது என்றாலும் பிங்கில் கொஞ்சம் சோர்வாகவே கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும் அவரை, அஜீத் தந்து எனர்ஜெடிக் கேரக்டரால் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

வழக்கம்போல் ஒரே ஒரு துயரம்தான்..."ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக  இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க?  என்ற வசனம் விஜய் ரசிகர்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது என்று ஒரு சிலர் கொளுத்திப்போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
#NerkondaPaarvai #NerkondaPaarvaiTrailer #NerkondaParvaiTrailerUpdate #NerkondaPaarvaiNews #ThalaAjith