AD

நடிகை விஜயநிர்மலா திடீர் மரணம்

கின்னஸ் சாதனை படைத்த தென்னிந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த விஜயநிர்மலா  திடீர் மாரடைப்புக் காரணமாக இன்று காலமானார்.

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அவரது, 73 வயதில்  உயிர் பிரிந்தது.  இதனால் தெலுங்கு சினிமா உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

தெலுங்கு திரையுலக முன்னணியினர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக 15 வயதில் பார்கவி நிலையம் என்ற மலையாளப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான விஜய நிர்மலா 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  40 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்தார்.

கலைத்துறையில் இவரின் சேவையைப் பாராட்டி, ஆந்திர அரசு உயரிய விருதான ரகுபதி வெங்கய்யா விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.


#VijayaNirmala  #cinesamugam