AD

ரஜினியின் இளமை காரணத்தை கூறிய சந்தோஷ்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மற்றொரு வேடத்திலும் நடித்து வருகின்றார். 
அதை ரகசியமாக வைத்துள்ளனர். 

இந்நிலையில்  ரஜினி குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"ரஜினி சார் அருமையானவர். அவரது சுறுசுறுப்பு அவரை இளமையாக வைத்திருக்கிறது. தளபதி படத்திற்குப் பிறகு அவரை படம் பிடிக்கிறேன்." 


#SanthoshSivan #Darbar #Rajinikanth #Tamilcinemaking