AD

வில்லனாக மாறிய சிம்பு

சிம்பு நடித்து வெளிவந்த படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' இப்  படத்துக்குப் பின்னர், சிம்பு தற்போது, ஹன்சிகா நடித்துவரும் 'மஹா' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.  படப்பிடிப்பு வரும் ஜூலை மதம் 23ம் திகதி தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப் படம் கன்னடத்தில் உருவான 'மப்டி' படத்தின் இயக்குநர் நர்த்தன்    படத்தை இயக்கவிருக்கிறார்.  இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். 

இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.



#Silambarasan  #tamilcinemaking