AD

நாட்டை மாற்ற கோபம் வேண்டும் - கமல்ஹாசன்

நாட்டை மாற்ற வேண்டுமானால் கோபம் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மையப்புள்ளியில் இருந்துதான் தோன்றும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பிக்பாஸ் இயக்குநர் கமல்ஹாசன்.

பிக்பாஸ்  சீசன்- 3  முதல் நாள்  நிகழ்ச்சி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே  கமல்ஹாசன் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

கமல் - இது எனக்கு முக்கியமான மேடை என்பதை விட கடல் போன்ற மக்களை சென்றடைய ஒரு பாலமாகவே நினைக்கிறேன். 

 ஊடகவியலாளர்- அரசியலுக்கு போய்விட்டீர்களே? அதன்பிறகு ஏன் பிக்பாசுக்கு வருகிறீர்கள்?

கமல் - என்னை நானாக காட்டிய ஒரு அற்புதமான மேடை. வந்தாரை வாழவைப்பது தமிழ்நாடுதான். ஆனால் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்ட்ரலை போட்டு தாக்குகிறேனே என்று கேட்காதீர்கள். தாக்குகிறேன் என்றால் காரணம் நிலவும் சூழல்தானே தவிர வேறொன்றுமில்லை. 

ஒரு தாய் மக்கள் நாமென்போம். நல்ல நாட்டை பார்த்தாலும் கோபம். நமது நாட்டை பார்த்தாலும் கோபம். ஏனென்றால் எனது நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே எனக்கோபம்.

ஷவரில் குளிப்பவர்களை பார்த்தாலும் கோபம். சாக்கடையில் தண்ணீரை கலப்பதை பார்த்தாலும் கோபம். நாட்டை மாற்ற வேண்டுமானால் கோபம் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மையப்புள்ளியில் இருந்துதான் தோன்றும். அதனால்தான் நான் பாரதி சொன்னதுபோல ரவுத்திரம் பழகிக்கொண்டிருக்கிறேன். என்றார்.

பிக்பாஸ்  3ஆவது சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது.  இதில் இயக்குநர் சேரன், நடிகர் சரவணன், வனிதா விஜயகுமார், பாத்திமா பாபு,  லொஸ்லியா, சாக்சி அகர்வால், , அபிராமி, மதுமிதா, கவின், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா போன்றோர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாகச்  சென்றுள்ளனர்.



#BigBash #kamal haasan