AD

நடிகர் கிரிஷின் மறைவுக்கு மோடி இரங்கல்

புகழ்பெற்ற கன்னட நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்நாட் உடல்நலக்குறைவால் தனது 81ஆவது வயதில் காலமானார். 

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

காதலன் திரைப்படத்தில் காக்கர்லா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் கிரிஷ் கர்நாட்.  கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் நடித்தவர். 

ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் இறுதியாகத்  தமிழில் நடித்த படம் 24.

கன்னடத்தில் புகழ்மிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த கிரிஷ் கர்நாட், இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞான பீடத்தையும் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் என இவர் பெற்ற விருதுகள் ஏராளம்.

81 வயதான கிரிஷ் கர்நாட், பெங்களூரில் வசித்து வந்த நிலையில், உடல் நலக் குறைவால் இன்று காலமானார். 

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, பன்முகத் திறன் மற்றும் நடிப்பால் கிரிஷ் கர்நாட் என்றும் நினைவில் கொள்ளப்படுவார் என்று குறிப்பிட்டார்.


 #GirishKarnad #Modi  #tamilcinemaking