AD

தமன்னாவின் கவர்ச்சி மழையில் - தேவி 2..!!!

 'தேவி 2' இரு பேய்களிடமிருந்து தன் கணவனைக் காப்பாற்றப் போராடும் மனைவியின் கதையே. ரூபி பேயிடமிருந்து மனைவி தமன்னாவை மீட்கிறார் பிரபுதேவா. இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. 2 ஆண்டுகள் கழித்து ரூபி பேய் இனியும் தங்கள் வாழ்க்கையில் விளையாடிவிடக் கூடாது என்பதற்காக பிரபுதேவாவும், தமன்னாவும் ஒரு முடிவெடுக்கின்றனர். பிரபுதேவா தன் அலுவலக வேலையை மொரிஷியஸுக்கு மாற்றிக்கொண்டு, மனைவியையும் அழைத்துச் செல்கிறார்.

இந்த முறை அலெக்ஸ், ரங்கா ரெட்டி என்ற இரு பேய்கள் பிரபுதேவாவின் உடலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறார்கள். அதனால் பிரபுதேவாவுக்கும், தமன்னாவுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிரபுதேவாவின் உயிருக்கும் ஆபத்து நேரிடும் அபாயம் ஏற்படுகிறது. யார் இந்த அலெக்ஸ், ரங்கா ரெட்டி, அவர்களின் கதை என்ன, பிரபுதேவாவுக்கு நேரும் பிரச்சினைகள் என்ன, அதிலிருந்து அவர் மீண்டாரா, பிரபுதேவாவை மீட்க தமன்னா எடுக்கும் முயற்சிகள் என்ன ஆகின போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை 'தேவி' 2.
தேவி படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து 'தேவி 2' படத்தை இயக்கியுள்ளார் விஜய். ஆனால், முதல் பாகத்திலிருந்த நகைச்சுவை "Missing"  இரண்டாம் பாகத்தில். பிரபுதேவா வழக்கம் போல் நன்றாக நடனம் ஆடுகிறார். உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளார். ஆனால், ஒரு உடம்புக்குள்ள டபுள் ஆக்‌ஷனா என்று ஆச்சர்யப்படும்படி நடிக்கவில்லை. ஆனால், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு எந்த பாதிப்பும் பிரபுதேவா செய்யவில்லை. "ஓ மை டார்லிங்" பாடலில் தமன்னா தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார்.
கணவனை மீட்கும் முயற்சிகளில் சற்றும் தளராமல் இருக்கிறார். கணவர் மீதான அன்பையும் காதலையும் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார். நந்திதாவும் டிம்பிள் ஹயாதியும் படத்தின் கதை நகர்த்தலில் முக்கியக் கருவிகளாகச் செயல்படுகிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி வருகைக்குப் பின்தான் சிரிக்கவே முடிகிறது. கோவை சரளா காமெடி என்கிற பேரில் சோர்வை ஏற்படுத்துகிறார். அர்ஜய், அஜ்மல், சோனு சூட் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையில் ஓ மை டார்லிங் பாடல் மட்டும் ரிப்பீட் ரகம். கோவை சரளா- தமன்னா காட்சிகள் சிலவற்றை ஆண்டனி தயங்காமல் கத்தரித்து இருக்கலாம்.
முதல் பாகத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடித்தது. அடுத்த பாகத்தில் ட்விஸ்ட் வேண்டும் என்பதற்காக பிரபுதேவாவுக்குப் பேய் பிடித்ததாகவும், 2-ம் பாகம் என்பதற்காகவும் 2 பேய்கள் பிடிப்பதுபோலவும் கதையை எழுதியுள்ளார் விஜய். ஆனால், திரைக்கதையில் எந்த புத்திசாலித்தனமும் இல்லை. தொய்வான திரைக்கதையைச் சரிசெய்ய கோவை சரளாவை உதவிக்கு அழைத்தாலும் அதில் எந்தவிதப் பலனும் இல்லை. நந்திதா, டிம்பிளை நம்பவைப்பதற்காக தமன்னாவும், கோவை சரளாவும் சொல்லும் படங்களில் இருந்து திருடிய கதைகள் அலுப்பின் உச்சம். ஆர்.ஜே. பாலாஜி மட்டும் கொஞ்சம் சிரிக்க வைத்து விட்டுச் செல்கிறார்.  பேய்ப் பட பட்டியலில் 'தேவி 2'வும் ஒரு படம் என்று சொல்லலாம்.

#prabhudeva #tamannabhatia #devi 2 #newmovie #moviereviews #tamilcinemaking