AD

உண்மையை வெளிட்ட காஜல்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான நடிகை காஜல் அகர்வால்.   வருடத்திற்கு ஏழு படங்கள் வரை அவருடைய படங்கள் வெளியாகும் காலமும் இருந்தது. 

இப்போது காஜல்  படங்களைக் குறைத்துக் கொண்டார். அப்படி படங்களைக் குறைத்ததற்கு என்ன காரணம் என  பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்ததாவது,

“எனக்கு அப்படி ஒரு வருத்தம் வரும் வரைக்கும் அது பற்றி உணராமல் இருந்தேன். 2013 இல் எனது சகோதரிக்கு திருமணம் நடைபெற்ற போது, நான் அந்தத் திருமணத்தில் ஒரு விருந்தினர் போலத்தான் கலந்து கொண்டேன். ஒரு குடும்ப உறுப்பினராக அந்தத் திருமணத்தில் என்னால் முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை.

அவள் எனக்கு மிகவும் நெருக்கமானவள். அவளுடைய சிறந்த நாள் ஒன்றுக்கு என்னால் முழுமையான நேரத்தை செலவிட முடியவில்லை என்பது என்னை பாதித்தது. அதன்பிறகுதான் படங்களைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்-என்றார்.



#Kajal_Aggarwal  #tamilcinemaking