சைராவில் நடனமாடும் அனுஷ்கா
தெலுங்குத் திரையுலகத்தின் அடுத்த படைப்பாக உருவாகி வருகிறது 'சைரா'.
இதில், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப், விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இது.
சரித்திர கால சுதந்திரப் போராட்டப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாட உள்ளாராம்.
மே மாதக் கடைசியில் அந்தப் பாடலின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம். 13 வருடங்கள் கழித்து மீண்டும் சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார் அனுஷ்கா.
இந்தப் பாடலுக்காக அனுஷ்காவுக்கு அதிகமான சம்பளமும் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#Anushka_Shetty #tamicinemaking
Post a Comment