AD

படு கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வெளியிடும் நடிகை..!!

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர்  லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, கெத்து, தெறி, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது. இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார  வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால்  பாலிவுட்டில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் எமி.
இதையடுத்து எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமாக இருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். எமியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் ஆச்சிரியத்தை கிளப்பியது. இருப்பினும் ஒரு தாயின் மனப்பக்குவத்தை எமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் முதன்முறையாகக் கர்ப்பம் குறித்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘இன்றுடன் 22 வாரம் ஆகிறது. இதுவரை என் கர்ப்பம் பற்றி நான் ஏதும் பேசவில்லை. தற்போது பேசலாம் என்று நினைக்கிறேன். இனி என்  கர்ப்பகாலம் குறித்த வீடியோக்களை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

#AmyJackson #AmyEngagement #AmyPregnancy #Latestnews #Tamilcinemaking