AD

காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை


ஒரு அடார் லவ் படத்தில் ரோஷன் அப்துல் ரவூஃபை பார்த்து கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.  ஆனால் அந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் தோல்வியையே சந்தித்தது. ப்ரியாவை கொண்டாடினவர்களே டத்தை பார்த்த பிறகு கலாய்க்க தொடங்கினர். இந்நிலையில் ப்ரியா வாரியர் ரோஷனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து ப்ரியா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, வதந்திகள் பற்றி நான் என்ன சொல்வது. அது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரோஷன் என் நல்ல நண்பர். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அவ்வளவு தான். அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். அவர் சிறந்த நடிகர், நல்ல டான்ஸர். எங்களுக்கு இடையேயான நட்பால் சிறப்பாக நடிக்க முடியும். இந்த கூட்டணி விரைவில் மீண்டும் சேர்ந்து நடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
#PriyaPrakashVarrier #Tamilcinemaking