AD

ட்ரோலாகும் பிரபல நடிகை புகைப்படம்..!!!

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் திங்களில் ’மெட் காலா ஃபேஷன்’ நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள், பாடகர்கள், ஃபேஷன் டிஸைனர்கள் என அனைவரும் கலந்துக் கொள்வார்கள்.

இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் கலந்துக் கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் ஜோடிகளாகக் கலந்துக் கொண்டனர். 2018 லும்  பிரியங்கா சோப்ரா கலந்துக் கொண்டார். தற்போது  தம்பதியாக பங்கெடுத்திருக்கிறார்கள்.

எப்போதும் வித்தியாசமான ஃபேஷன் முயற்சிகளில் இறங்கி, ஸ்டைலிஷாக வலம் வரும் பிரியங்காவுக்கு இந்த முறை என்னவாயிற்று என அவரின் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். மற்றவர்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக அவரின் ஹேர் ஸ்டைல் மற்றும், கண் ஒப்பனை ஆகியவை அதிக ட்ரோலுக்கு இடம் கொடுத்திருக்கிறது.



Met 2017


Met 2018



Met 2019



#Bollywood #PriyankaChopra #Met2017 #Met2018 #Met2019 #Tamilcinemaking