AD

சூர்யாவின் கட்-அவுட் அகற்றம்

திருத்தணியில் நடிகர் சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது.

இதையொட்டி திருத்தணி புறவழிச்சாலையில், திருவள்ளூர் மாவட்ட இரசிகர் மன்றம் சார்பில் சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது. 

ஆனால் இதற்கு நகராட்சியின் அனுமதி பெறப்படவில்லை. இதன் காரணமாக அந்த கட்-அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.


#Suriya  #NGK #tamilcinemaking