AD

படவாய்ப்பிற்காக இப்படி மாறிபோன காஜல்


தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். ஆனால் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இந்தியில் சூப்பர் ஹிட்டான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸில் காஜல் நடித்துள்ளார். இப்படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் கூட, இன்னும் ரிலீசாகவில்லை.பாரிஸ் பாரிஸ் படத்தை தான் காஜல் மலை போல் நம்பி இருக்கிறார்.

இதற்கிடையே கமலுடன் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். கமல், ஷங்கர் என மிகப்பெரிய கூட்டணி என்பதால், இப்படத்திற்காக தனது மற்ற சில படவாய்ப்புகளை மறுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப் படமும் பாதியில் நிற்கின்றது. அது மீண்டும் எப்போது தொடங்கும் என்பது சரியாக தெரியவில்லை.

இதனால் வந்த வாய்ப்புக்களை இழந்து தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றார் காஜல். இதனால் புதிய வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக  கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார். இதுவரை ஹோம்லியாகவும், குறைந்தபட்ச கிளாமரும் காட்டி வந்த வந்த காஜல், செக்சியாக நடிக்க தான் ரெடி என இயக்குனர்கள், ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சிக்னல் கொடுத்திருப்பதையே இந்த புகைப்படங்கள் உணர்த்துகின்றன. 
#Kajal #Kajalagarwal #Kajalagarwallatest #Tamilcinemaking