AD

தல அஜித் பற்றி நாம் அறியாத விஷயங்கள்!


நடிகர் அஜித் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன் பைக் மெக்கானிக்காக இருந்தார், ரேஸில் ஆர்வமுள்ளவர் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல துறைகளில் அவர் சிறந்து விளங்கியவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

முதல் வேலை

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அஜித், கையிலெடுத்த முதல் வேலை பக் மெக்கானிக்.

கார்மெண்ட்ஸ் 

பின்னர் ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வணிகச் சரக்கு விற்பனையாளராகப் பணியாற்றினார்.

பைக் ரேஸர்

பைக்கின் மேல் இருந்த தீராக் காதலால், தனது சொந்த செலவிலேயே ரேஸருக்கான அனுமதி வாங்கி, போட்டிகளில் பங்கேற்று வந்தார். இதில் பலமுறை விபத்துகளும் அஜித்துக்கு நிகழ்ந்துள்ளன.

மாடல்

கையில் புல்லாங்குழலோடு அஜித் நடித்த ‘மியாமி’ காலணி விளம்பரத்தை இன்றும் சமூக வலைதளங்களில் காணலாம்.

ஒரு புறம் ரேஸ் மறு புறம் சின்ன சின்ன விளரம்பரங்கள் என நடித்து வந்த அஜித், ஒரு கட்டத்தில் பெரும் விபத்து ஒன்றை சந்தித்தார். அதன் பின்னர் மீண்டும் ரேஸில் பங்கேற்கக் கூடாது என்ற மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று, முழு வீச்சில் மாடலிங்கில் இறங்கினார்.

நடிப்பு

1990-ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அஜித். வெள்ளித்திரையில் இதுதான் அவரின் முதல் பிரவேசம்.

கார் ரேஸ் 

நடிக்க வந்த பின்பும் கூட கார் ரேஸில் பங்கேற்றார். ஃபார்முலா 2 ரேஸில் பங்கேற்ற முதல் இந்திய நடிகர் அஜித் தான்.

ஏரோ மாடலிங்

சிறிய வகை விமானம் மற்றும் ஹெலிகாப்டரை வடிவமைக்கத் தெரிந்தவர். இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் வானூர்திகளைக் கூட கழட்டி மாட்ட தெரிந்தவர் தொலைக்காட்சி பேட்டியில் கூறப்பட்டிருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ’தக்‌ஷா’ குழுவில் கெளரவ ஆலோசகராக அஜித் இருப்பது உங்களுக்கு தெரியும் தானே?

சமையல்

அஜித்தின் பிரியாணி பற்றி அறியாதோர் தமிழ்நாட்டில் உண்டோ?

புகைப்பட கலை

புகைப்படம் பற்றிய நுணுக்கங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் அஜித்துக்கு, இதுதான் பொழுது போக்கு. தனக்கு நெருக்கமானவர்களுக்கு தன் கையால் புகைப்படம் எடுத்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

#thalaajith #thalaajithjobs #thalaajithhistory #thalajithfans #thalajithjobs #thalaajithhobby #ajithkumarfans #ajith