AD

அம்மாவை நினைவு கூறும் நடிகை சுதா சந்திரன்..!!!

என் வாழ்க்கையில் என்னுடைய அம்மா தங்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. இளமைப் பருவத்துல எனக்குப் பெரிய விபத்து ஏற்பட்டப்போ, இனி வாழ்க்கையே முடிஞ்சுபோயிடுச்சுனு நான் வருத்தப்பட்டேன். அப்போ, `இத்துடன் உன் வாழ்க்கை முடியலை. இனிதான் உனக்கான அர்த்தமுள்ள வாழ்க்கை இருக்கு'னு சொல்லி என்னை ஊக்குவிச்சது என் அம்மாதான். `

எனக்கு ஏற்பட்ட சவாலான தருணத்துக்குப் பிறகு, அம்மாவின் துணையுடன் போராடித்தான் டான்ஸராவும், நடிகையாவும் புகழ்பெற்றேன். 2004-ம் ஆண்டு அம்மா இறக்கும் தறுவாயில், `ஐ எம் ப்ரவுட் மதர்'னு சொன்னதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. இப்பவும் ஒவ்வொரு நாளும் என் அம்மாவை மிஸ் பண்றேன்.
ஆண்டுதோறும் ஒருநாள் மட்டும் அம்மாவைப் பெருமைப்படுத்துவது, மேலைநாட்டு கலாசாரத்துக்குப் பொருந்தலாம். ஆனா, நம்ம நாட்டைப் பொறுத்தவரை வருஷத்தில் ஒவ்வொரு நாளையும் அன்னையர் தினமா கொண்டாடணும். அப்படித்தான் இப்போவரை என் அம்மாவை நினைச்சுப் பெருமைப்படறேன். ஒவ்வொரு நாளும் காலையில எழுந்ததும் என் அம்மாவை நினைச்சுப் பார்த்து, அவங்களுக்கு நன்றி சொல்லுவேன்" என்கிறார் சுதா சந்திரன்.

வாழ்க்கையில எப்போதும், எந்தச் செயலா இருந்தாலும், `என்னால முடியும்'னு நம்பிக்கையோடு எதிர்கொள்ளணும். என்னால முடியாதுனு ஒருபோதும் பின்வாங்கக்கூடாது. யாருக்கும் எதுக்குமே பயப்படக்கூடாது; தைரியமா வாழணும். ஒவ்வொரு நாளும் உனக்குச் சந்தோஷமா முடியணும்'னுதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. அதன்படி இப்போ வரை இயங்கிட்டிருக்கேன்.
ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நடிகை சுதா சந்திரன், தன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அம்மாவை பற்றிய நினைவுகளை ஒரு இணையதள பேட்டியில் கூறியுள்ளார்.

#SudhaChandran #Mother'sday #Mother #Heroine #ZeeTamil #TelevisionSerial #Tamilcinemaking