AD

ராகவா லாரன்ஸை புகழும் நடிகை ஸ்ரீரெட்டி...!!!

நடிகை ஸ்ரீரெட்டி சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் மூலம் தெலுங்கு படவுலகை ஒரு கலக்கு கலக்கியவர். பவன் கல்யாண், ராணாவின் தம்பி உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்ற சாட்டு வைத்தவர். அதன் பிறகு தமிழ் திரை உலகம் மீது இவர் பார்வை திரும்பியது.

A.Rமுருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டசிலர் மீது குற்ற சாட்டை அடுக்கினார். தன மீதான குற்ற சாட்டு குறித்து ராகவா லாரன்ஸ் அவரை நான் நேரில் பார்த்தது கூட இல்லை!!! வேண்டுமானால் அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். இதற்கு பிறகு ராகவா லாரன்ஸ் மீது எந்த ஒரு குற்ற சாட்டயும் வைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கிய "காஞ்சனா 3" தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்றது.  "காஞ்சனா 3" படத்தின் விளம்பரத்தை தனது "facebook" கில் பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. அது மட்டுமில்லாமல் "உங்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும், வாழ்த்துகள் மாஸ்டர்... உங்களுடன் பணியாற்ற காத்து கொண்டுருக்கிறேன். உங்கள் வெற்றியில் எனக்கு பெரும் மகிழ்ச்சி..!!!  உங்களில் எத்தனை பேர் என்னை மாஸ்டரின் படத்தில் பார்க்க விருப்புகிறீகள்? என்று கேட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டியின் இந்த மாற்றம் பலரையும் ஆச்சிரிய பட வைத்துள்ளது. தற்பொழுது தமிழில் "ரெட்டி டயரி" என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் ஸ்ரீரெட்டி.


#Kanchana3 #RaghavaLawrence #SriReddy #Tamilcinemaking