AD

விஜய் சேதுபதி பற்றி தெரியாத பத்து உண்மைகள்


வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் தனக்கென தனி இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. எந்த ஒரு சினிமா குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பு, திறமை என்னும் தாரக மந்திரம் மூலம் தனக்கென தமிழ் திரையுலகில்   ஒரு  அடையாளத்தை   ஏற்படுத்திக்   கொண்டவர். விஜய்க்கு  அடுத்தப்படியாக இப்பொழுது   விஜய்  சேதுபதி என்று  சினிமா விமர்சகர்கள் கூறினாலும், போடு  போடும்   ஒவ்வொரு படமும் இவரின் அர்ப்பணிப்பின் அடையாளங்களே. நடிப்பைத் தாண்டிச் சிறந்த தயாரிப்பாளர், வசனக் கர்த்தா, பாடலாசிரியர் எனும் பன்முகங்களைக் கொண்டவர்.

விஜய் குருநாத சேதுபதி என்னும் இயற்பெயர் கொண்ட இவர் மதுரையை தாயகமாக கொண்டவர். 1978 ஆம் ஆண்டு ஜனவர மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். விருதுநகர் ராஜப்பாளையத்தில் வாழ்ந்து வந்த இவரது குடும்பம் இவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சென்னைக்கு குடிப்பெயர்ந்தது. துபாயில் வேலை பார்க்கும்  போது கேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்னும்  பெண்ணின்   மீது   காதல் கொண்டு அவரை கரமும் பிடித்தார். சேதுபதி-ஜெஸ்ஸி தம்பதிக்கு சேதுபதி படம் போன்றே சூர்யா, ஸ்ரீஜா என்னும் இரண்டு அழகான குழந்தைகள் உள்ளன.

சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது பெரிதாக ஆர்வம் எதுவும் சேதுபதிக்கு கிடையாது. இன்றைய கல்வியைத் தாண்டியும் பிரகாசமான வாழ்க்கை   உண்டு என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அதற்கு விஜய் சேதுபதியே பொருத்தமானவர். கல்வியைத் தாண்டி வேறு எதிலும் நாட்டமும் இல்லாத   மாணவனாகவே கல்லூரி வரை இருந்துள்ளார். Bcom வரை படித்துள்ள   இவருக்குள்இப்படி ஒரு அவதாரம் இருக்கும் என சினிமா துறைக்குள்  வரும் முன் அவரே நம்பி   இருக்கமாட்டார் . திரையில் பின்னணி நடிகராகத்   தோன்றியதே   இவரின்   சினிமா பயணத்திற்க்கான தொடக்கமாக    இருந்தது.

பல குறும்படங்களில் நடித்து வந்த இவருக்கு கார்த்திக்   சுப்புராஜ் என்ற இயக்குனருடன் சேர்ந்து நடிக்கும்   வாய்ப்பு கிடைக்க அதை தவறாமல் பயன்படுத்திக் கொண்டார். புதுப்பேட்டை படத்திற்கான துணை நடிகர் தேர்வுக்குச் சென்ற  இவர் தனுஷின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பு பெற்றதன் மூலம் திரையில் தோன்றினார். லீ,  சுசிந்திரம்,  வெண்ணிலா கபடி  குழு போன்ற படங்களில்  சிறு வேடங்களில் நடித்த இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது “தென்மேற்கு பருவகாற்று “.

அந்த காற்று மெல்ல  மெல்ல  இவர் வாழ்க்கையிலும்   வீசத்   தொடங்கியது. சுந்தர பாண்டியனில் இவரது வில்லன் வேடம்  இவரின்  தனித்துவத்தை காட்டியது. பிட்சா,  நடுவுல கொஞ்சம்  பக்கத்த காணோம் என்னும் படங்கள் சேதுபதியின் வேறு வேறு முகங்களைக்   காட்டியன .

எந்த  நடிகரும்   நடிக்கத் தயங்கும் ஒரு வேடத்தில் சூது கவ்வும் படத்தில் நடித்ததன்  மூலம்   யாரும் எழுதா  புது   இலக்கணம்    படைத்தார். புதுமுகமாகத் தோன்றினாலும் தனக்கான  நடிப்பின் மூலம் வருடத்திற்கு 2 முதல் 3 படம்   தரும்   அளவில்  வளர்ந்து  வரும் சேதுபதியின் கொள்கை , " இதுவரை நடித்த யாரின் நடிப்புத் தோரணையும் தன்னில் வெளிப் படக்கூடாது" என்பர்.

#vijaysethupathuunknownfacts #vijaysethupathihistory #vijaysethupathipersonallife