மனம் திறந்த ஜெயம் ரவி
இயக்குநர் லக்ஷ்மன் இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்தப் படம் ஜெயம் ரவியின் 25 ஆவது படம். 
இப்படம் குறித்து  அவர் தெரிவித்ததாவது,,
‘என்னுடைய 25 ஆவது படத்தை லக்ஷ்மன் இயக்குறார். நான் ரொம்ப நாளா பண்ணணும்னு நினைச்ச விஷயத்தைப் படமா பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமா, மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமா இது இருக்கும். 
அண்ணனுக்கும் இந்தப் படம் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால, இதை முடிச்சுட்டு வா, நாம எப்போவேணா `தனி ஒருவன் 2' பண்ணலாம்னு சொல்லியிருக்கார். என்னை எனக்குக் காட்டிய படங்களில், `பேராண்மை'யும் ஒண்ணு.
இந்தப் படத்துல நடிச்சது எனக்குப் பெருமை. மத்தபடி, நானும் ஒரு அரசியலை பாலோ பண்றேன். அந்த அரசியலுக்குள்ள தான் இருக்கேன். அதுக்காகத்தான் தேர்தல்ல ஓட்டு போடுறேன். நான் எந்தக் கட்சியிலும் இல்லை; தனிப்பட்ட நபர் யாரையும் ஆதரிக்கவில்லை'-என்றார்.
#Jayam_Ravi #tamilcinemaking
 

 
 
 
 
 
 
 
 
 
Post a Comment