AD

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முதல் போட்டியாளர்..!!


அண்மையில் பிக்பாஸ் சீசன் 3 ல் லைலா பங்கேற்கவுள்ளார் என்ற செய்தி பரவி அதன் பின்  தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கம் அளித்துள்ள லைலா, பிக்பாஸ் சீசன் 3ல் தான் கலந்து கொள்ளப்போகும் செய்தியை மிக கடுமையாக மறுத்துள்ளார். 

அந்த பதிவில், இது மிகவும் கீழ்தரமான விளம்பரப்படும் செயல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் போட்டியாளராக பங்கேற்கப்போவதில்லை என லைலா திட்டவட்டமாக தெரிவித்தது அறிந்ததே.

இந் நிலையில் தற்போது இப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒரு போட்டியாளரின் பெயர் உறுதியாகியுள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்த மதுமிதா இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 #madhumitha #Bigboss3 #Tamilcinemaking