AD

பாகுபலி பிரபாஸின் அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். ஷங்கர் - இசான் - லாய் ஆகியோர் இசையமைக்க, யூவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் 
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில்  உருவாகிறது.

இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் பிரபாஸ் ஆகஸ்ட் 15 ஆம் திகதி படம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.


#Prabhas  #Neil_Nitin_Mukesh  #Shraddha_Kapoor #tamilcinemaking