AD

கமல் இதுவரை சாதித்த மொத்த விஷயங்கள்


தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் உலகநாயகன் என்று பேர் பெற்றவர் தான் கமல் ஹாசன் அவர்கள். இவர் பல்வேறு துரைல்களில் கால் பதித்துள்ளார். நடிப்பு மற்றும் இயக்குனருடன் கூடுதலாக, அவர் திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் மற்றும் நடன இயக்குனர் ஆவார். அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் அவரது பல திரைப்படங்களை தயாரித்துள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல இந்திய திரைப்பட விருதுகளை வென்றுள்ளது. மேலும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடெமி விருதுக்கு போட்டியிட்ட இந்தியாவின் பெரும்பாலான படங்களில் இவரது திரைப்படங்கள் அடங்கும்.

தேவர் மகன் திரைப்படம் மூலம் சிறந்த தயாரிப்பாளர் விருதை கமல் பெற்றார்.  2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு கமலுக்கு நடிப்பின் உயரிய விருதான, செவாலியர் விருதினை வழங்கியது. இதன் மூலம் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதை பெரும் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றார் கமல். இத்துடன் முடிவு பெறாமல் இவரது விருது பட்டியல் மேலும் நீண்டு போகிறது. 1990 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2014 ஆண்டு பத்ம பூஷன் விருதும் பெற்றார் கமல்.

தமிழ் மட்டும் இல்லாமல், 1985 ஆம் ஆண்டு வெளியான சாகர் திரைப்படத்திற்காக கமல் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.  1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம், அவரது நடிப்பிற்கு மேலும் பலம் சேர்த்தது. இந்த படத்தின் மூலம் அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

#kamalvideo #kamalawardsinlifetime #kamalnewvideoviral