AD

ஜானகி அம்மாவிற்கு ஏற்பட்ட விபத்து


தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, இந்தி,  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி, லட்ச கணக்கான ரசிகர்களை தன்னுடைய இனிமையான குரலால் கவர்ந்தவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவரின் குலரால் பல பாடல்கள் தமிழ் சினிமாவில் நம்மை கவர்ந்தது என்று கூறினார் மிகையாகாது. இந்த நிலையில் கடைசியாக இவர் 96 படத்தில் இளம் வயது ஜாணுவிற்கு குரல் கொடுத்தார். வயதான நிலையில், பல பட வாய்ப்புகளுக்கு நோ சொல்லி வந்த பாடகி ஜானகி அம்மா, குடும்பத்தினரோடு இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மைசூரில், உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் இருந்துள்ளார். அங்கு குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது, கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் எஸ்.ஜானகி அம்மாவிற்கு, உடலில் சிறு சிறு காயங்களும் இடுப்பில், எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதனால் தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரப்படுகிறது. இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். முழுமையாக ஓய்வில் இருந்தால் மட்டும் தான் முழுமையாக குணமடைய முடியும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.

#janaki #singerjanaki #tamilsingerjanaki #janakiammal #janakkiammasongs