AD

விஜய் ”63” ஃபர்ஸ்ட் லுக் விரைவில்

விஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து ரசிகர்களுக்கு மறைமுக அப்டேட் கொடுத்துள்ளார் விவேக்.

இயக்குநர் அட்லீ தயாரிப்பான இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

 தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி இன்னும் 30 நாட்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்.



#Vijay  #Nayanthara #tamilcinemaking